2026ல் தோனி ஐபிஎல் விளையாடுவாரா

2026ல் தோனி ஐபிஎல் விளையாடுவாரா? ஸ்டீபன் பிளமிங் வினோத பதில் – ரசிகர்கள் ஆச்சரியம்!


2026ல் தோனி ஐபிஎல் விளையாடுவாரா? ஸ்டீபன் பிளமிங் வினோத பதில் – ரசிகர்கள் ஆச்சரியம்!

நடப்பு ஐபிஎல் (IPL) 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி பல தோல்விகளை சந்தித்து, புள்ளி பட்டியலில் பின்தங்கிய நிலையில் இருந்தாலும், அடுத்த சீசனுக்கான திட்டங்களை முன்னதாகவே உருவாக்கியுள்ளது. இந்நிலையில், அணியின் பழைய கேப்டன் மகேந்திர சிங் தோனி 2026ல் விளையாடுவாரா என்பது தொடர்பாக, அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் அளித்த பதில் ரசிகர்களிடம் கலவையான எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது.

தோனி மீண்டும் கேப்டனா?

இந்த சீசனில் மோசமான வீரர் தேர்வுகள் காரணமாக தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்த சிஎஸ்கே, கேப்டன் ருத்ராஜ் காயம் அடைந்த பிறகு தோனியை மீண்டும் கேப்டனாக பதவியேற்கச் செய்தது. அணியின் நிலைமையை விரைவாக புரிந்துகொண்ட தோனி, திறமையான மாற்று வீரர்களை சேர்த்து அணியை உறுதியாக அமைத்தார்.

2026ல் தோனி ஆடுவாரா? பிளமிங் பதில்:

இந்த சூழ்நிலையில், 2026 ஐபிஎல் சீசனில் தோனி விளையாடுவாரா? என்று கேட்ட செய்தியாளரின் கேள்விக்கு பிளமிங் பதிலளிக்கையில்,

“அடுத்த வருடம் எம்எஸ் தோனி விளையாடுவாரா என்பது எனக்கே தெரியவில்லை. இளம் வீரர்கள் இந்த தொடரில் நல்ல தாக்கம் ஏற்படுத்தியுள்ளனர். ஆனால் நாங்கள் தொடக்கத்திலேயே வேகத்தில் இல்லை என்பதை உணர்ந்தோம். இப்போது இளம் வீரர்களை கொண்டு அணியின் தத்துவத்தை மீண்டும் உருவாக்கும் பணியில் இருக்கிறோம்.”

இதையும் படிங்க :“தோனி தேசத்துரோகியா?” – சமூக வலைதளங்களில் பரவும் விவாதம்: பின்னணி என்ன?

“என் பார்வையில் அனுபவமும் இளமையும் சமமாக முக்கியம். அனுபவம் போட்டிகளை வெல்லும், ஆனால் இளைய வீரர்களும் புறக்கணிக்க முடியாத சக்தி” என அவர் தெரிவித்தார்.

பிளமிங் கூறிய “தோனி விளையாடுவாரா என்பது எனக்கே தெரியவில்லை” என்ற பதில், தோனியின் ரசிகர்களிடம் சற்றே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, அவரது எதிர்காலம் குறித்து பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top